இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்தால் இழப்பீடு - SDPI வழக்கறிஞர் எச்சரிக்கை

திரைப்படங்களில் இஸ்லாமியர்களின் தொப்பி, புர்கா அணிந்து நடித்தால் இழப்பீடு கேட்கப்படும் என எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2021, 01:50 PM IST
இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்தால் இழப்பீடு - SDPI வழக்கறிஞர் எச்சரிக்கை title=

திரைப்படங்களில் இஸ்லாமியர்களின் தொப்பி, புர்கா அணிந்து நடித்தால் இழப்பீடு கேட்கப்படும் என எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எச்சரித்துள்ளார்.

சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘ஜெய்பீம்’ (Jaibheem) திரைப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதுடன், எதிர்ப்பும் எழுந்துள்ளது. அந்த திரைப்படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐயின் பெயர் குருமூர்த்தி என வைக்கப்பட்டதற்கும், அவரது வீட்டில் இருக்கும் ஒரு காட்சியில் வன்னிய சமூக மக்களின் அடையாளமாக இருக்கும் அக்னி கலசம் இடம் பெற்றதற்கும் பா.ம.க தரப்பில் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். இது குறித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கு, நடிகர் சூர்யா பதில் அறிக்கை கொடுத்த பிறகும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

சமூக வலைதளங்களிலும் ஜெய்பீம் படத்துக்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. படைப்புச் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், இதேநிலை நீடித்தால் அரசியல் கட்சி தலைவர்களிடம் கதையைக் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே படம் எடுக்க வேண்டிய சூழல் இருக்கும் எனவும் கூறி வருகின்றனர். 

ALSO READ | 'ஜெய் பீம்' பட சர்ச்சை குறித்து இயக்குனர் ஞானவேல் கூறிய பதில்!

மேலும், அக்னி கலசம் மற்றும் பெயருக்காக எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு மத்தியில், இஸ்லாமியர்கள் குறித்து எத்தனை திரைப்படங்களில் தவறாக காட்டப்பட்டுள்ளது, அதற்காக ஏன் அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியும் சமூகவலைதளத்தில் எழுந்ததுள்ளது. இனிமேல், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், அவர்களின் மத அடையாளத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெறக்கூடாது என சிலர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த அருப்புக்கோட்டை நகர தலைவர் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்லாமியர்களின் மத அடையாளங்களான தொப்பி, புர்கா அணிந்து திரைப்படங்களில் நடித்தால், இழப்பீடு கேட்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 

ALSO READ |  ஜெய் பீம் படத்துக்கு வலுக்கும் ஆதரவு: பாம்புகளை ஏந்தி பழங்குடியினர் போராட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News