ஜெய் பீம் படத்துக்கு வலுக்கும் ஆதரவு: பாம்புகளை ஏந்தி பழங்குடியினர் போராட்டம்

ஆர்பாட்டத்தின் போது பேசிய பழங்குடி கூட்டமைப்பினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாம்பை வீசுவோம் என பேசினர்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 22, 2021, 04:40 PM IST
ஜெய் பீம் படத்துக்கு வலுக்கும் ஆதரவு: பாம்புகளை ஏந்தி பழங்குடியினர் போராட்டம்

ஜெய் பீம் படத்துக்கு ஆதரவாக பழங்குடி கூட்டமைப்பினர் பாம்புகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படம் பல தரப்பினராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. எனினும், இந்த படத்திற்கு வந்துள்ள சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா (Actor Surya) உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம். ஓடிடி தளத்தில் கடந்த 2 ஆம் தேதி வெளியான இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தின் அடையாளத்தை காலண்டரில் பயன்படுத்தியதாக கூறி சர்ச்சை எழுந்த நிலையில், பாமக-வினர் மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்றைய தினம் திரைப்படத்தின் பொருட்டு இயக்குநர் ஞானவேல் வருத்தமும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் ஜெய்பீம் (Jai Bhim) படத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடினர். இவர்கள் தங்களுடன் சாரைப்பாம்பு, நல்லபாம்பு, எலிகள், பூம் பூம் மாடு ஆகியவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.

ALSO READ:'ஜெய் பீம்' பட சர்ச்சை குறித்து இயக்குனர் ஞானவேல் கூறிய பதில்! 

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் மூலம் நாடோடிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நாடோடிகளை தேடிச் சென்று அரசு உயர் அதிகாரிகள் அவர்களது குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளார். 

அதன் அடிப்படையில் அதிகாரிகள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து வருவதாகவும் ஜெய்பீம் படம் மூலம் தங்களது இன்னல்களை சுட்டிக்காட்டிய நடிகர் சூர்யாவிற்கும், படத்தை பார்த்து உடனடியாக தங்களது குறைகளை களைய நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் (MK Stalin) அவர்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  நன்றியும் வாழ்த்துக்களையும்  தெரிவித்தனர். 

மேலும் பதாதைகளை ஏந்தி தமிழக நாடோடிகள் பழங்குடி கூட்டமைப்பினர் கோஷங்கள் எழுப்பி நன்றி தெரிவித்தனர். ஆர்பாட்டத்தின் போது பேசிய பழங்குடி கூட்டமைப்பினர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாம்பை வீசுவோம் என பேசினர்.

ALSO READ:'ஜெய் பீம்' படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News