சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் சிவகார்திகேயன்!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து விசாரிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் காவேரி மருத்துவமனை வருகை!
Chennai: Kerala Chief Minister Pinarayi Vijayan visits DMK Chief M Karunanidhi at Kauvery Hospital, says, "He has immense will power. His condition is improving." pic.twitter.com/qLjsPTSo8l
— ANI (@ANI) August 2, 2018
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கருணாநிதி உடல் நலம்பெற வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.
இந்நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதி அவர்களை காண வருகை புரிந்துள்ளார். கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது...
"கருணாநிதி உடல்நலம் குறித்து முக ஸ்டாலின் மற்றும் கனிமொழி அவர்களிடம் கேட்டு அறிந்தேன். அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்
Chennai: Kerala Chief Minister Pinarayi Vijayan meets MK Stalin and Kanimozhi at Kauvery Hospital, where DMK Chief M Karunanidhi is admitted. pic.twitter.com/Z5reGXfds7
— ANI (@ANI) August 2, 2018
கலைஞர் கருணாநிதி பிறப்பால் போராளி, இப்போது அவரது போராட்ட திறன் அவரது நிலையில் தெரிகிறது. அவரது உடல் விரைவில் நலம்பெற பிராத்திக்கின்றேன்" என தெரிவித்தார்.