ஏழை மக்கள் பயன்படுத்தக்கூடிய குறைந்த கட்டணத்தில் 100 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது:-
தமிழகத்தில் 2000 மின்சார பஸ்களும், 12,000 காற்று மாசுபடாத அதி நவீன புதிய பஸ்களும் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சியில் விரைவில் இயக்க முதல்வர் சி.40 அமைப்புடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
ஏழை மக்கள் செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடைய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய குளிர் சாதன பஸ்கள் 3-2 என்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் 50 குளிர் சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.