தென்மேற்கு பருவமழை துவங்க 3 நாட்களில் சாதகமான சூழல்!!

தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல், தெற்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : May 22, 2019, 03:34 PM IST
தென்மேற்கு பருவமழை துவங்க 3 நாட்களில் சாதகமான சூழல்!!  title=

தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல், தெற்கு வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்குள் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதி வாரத்தில் துவங்குவது வழக்கம். ஆனால் இந்த முறை தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதற்கான சாதக சூழலானது இந்த மாதம் 19, 20 தேதிகளில் தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த சாதக சூழலிலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 தினங்களில் தெற்கு அந்தமான் கடற்பகுதியிலும், தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் தென்மேற்கு பருவமழைக்கான சாதக சூழல் ஏற்படும். அதன் பிறகு 10 நாட்கள் கழித்து அதாவது ஜூன் 6 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையின் போது கேரள மாநிலத்தில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகமாக மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், மே 19, 20ம் தேதி சாதக புயல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சாதக சூழல் 3 தினங்கள் தாமதமாக ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

 

Trending News