தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...

Last Updated : Mar 26, 2019, 08:22 AM IST
தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை...

ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லைத்தாண்டி தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை விரட்டி அடித்ததுடன், அவர்களை 2 படகுகளுடன் கைது செய்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படை விசாரணை செய்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News