ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி...

ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோவில் அனுமதி...

Last Updated : Aug 29, 2018, 09:27 AM IST
ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி...  title=

ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோவில் அனுமதி...

தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதி, கடந்த 7 -ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், நேற்று இரவு உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

கடந்த சில மாதங்களாகவே அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்துவந்தார். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கு வந்து பார்த்துச் சென்றார். இந்த நிலையில், நேற்று இரவு தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவர், சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை தயாளு அம்மாளை பார்க்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளார். 

 

Trending News