அரசின் தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி...

வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி (internship training) வழங்கிட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிதுள்ளது!

Last Updated : Dec 7, 2018, 06:27 PM IST
அரசின் தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி... title=

வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி (internship training) வழங்கிட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிதுள்ளது!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் 10,000 பயிற்சியாளர்களுக்கு ரூ.50.80 கோடி செலவில் சிறு,குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி (internship training) வழங்கிட அரசால் ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இப்பயிற்சி வழங்கிட விருப்பமுள்ள தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் 30.11.2018 வரை பெறப்பட்டது. தற்போது இந்த காலக்கெடு 31.12.2018 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு கிண்டி தொழிற்பேட்டை ஆலந்தூர் சாலையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 044-22501002 / 22501006 / 22500900 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணையர்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
ஆலந்தூர் சாலை
கிண்டி, சென்னை – 600 032.

கால நீட்டிப்பின்படி விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள். -31.12.2018.

Trending News