மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை -சுப்ரீம் கோர்டு

Last Updated : Aug 17, 2017, 03:18 PM IST
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை -சுப்ரீம் கோர்டு title=

தமிழக மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்தக் கோரி வழக்குக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. 

மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் என்பவர் மருத்துவ கவுன்சிலிங்கை விரைவாக நடத்த வேண்டும் என கூறி சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரித்த நீதிபதிகள் கூறியது, தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உடனடி கலந்தாய்வுக்கு உத்தரவிட முடியாது. மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. மேலும் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் தமிழக அரசு அளிக்கவேண்டும்.

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும். தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டமானது எந்த வகையிலும் மாணவர்களின் நலனுக்கு பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனமாக இருக்கவேண்டும். 

மேலும் நீட் தேர்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Trending News