தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி, தமிழகம் முழுவதும் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்று அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம். மேலும் இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக் அய்யாக்கண்ணுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.