இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒரேநாளில் 2,40,842 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,65,30,132 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 24 மணிநேரத்தில் 3,741 பேர் கொரோனாவால் பலியாகிய நிலையில் மொத்த உயிரிழப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையில் தலைநகர் டெல்லியில் (Delhi) கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று பரவல் குறைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 2,260 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு 3.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ALSO READ | பரிதாபம்! கொரோனா வைரசால் 38 கர்ப்பிணிகள் பலி
இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு (Lockdown) நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், இன்று மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்தால் 31 ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றார்.
தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதால் டெல்லியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுவதால் 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகள் இருக்கலாம் என்று தெரிகிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR