சென்னை: தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியுள்ளது. 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கிடையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று (Coronavirus) பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்-அப் ஆகியவற்றில் வகுப்புகள் நடத்தப்பட்டன. தொற்றின் வீரியம் குறையாததால், 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் எந்த அடிப்படையில் அளிக்கப்படும் என இன்னும் சில தினங்களில் தெரிய வரும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு சான்றிதழிலும், மதிப்பெண்கள் எதுவும் இருக்காது என்றும் தேர்ச்சி பெற்றதாக மட்டுமே இருக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
ALSO READ: Tamil Nadu: தமிழகத்தில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது
இன்று முதல் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு (Lockdown) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம்.
சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையத்தில் வெளியிடவும் அறிவுறுத்தல்.#TNSchools pic.twitter.com/Nkac7Vizym— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 14, 2021
தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன், பிற ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பணிகளை மெற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்ச்சி விவரங்களை கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையத்தில் வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில், தொற்று குறைந்தவுடன் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கவில்லை என்று கூறினார். 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிழதழில் மதிப்பெண் இருக்காது, மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
ALSO READ: பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR