`ஜியோ சிந்தடிக்ஸ்’’ - ஒரு நாள் கருத்தரங்கம் தமிழக அரசின் அறிவிப்பு...

தமிழக அரசின் சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை தொழில் முனைவோருக்கு 'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்' துறையில் பயிற்சிபட்டறை மற்றும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Dec 7, 2018, 07:55 PM IST
`ஜியோ சிந்தடிக்ஸ்’’ - ஒரு நாள் கருத்தரங்கம் தமிழக அரசின் அறிவிப்பு... title=

தமிழக அரசின் சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை தொழில் முனைவோருக்கு 'டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்' துறையில் பயிற்சிபட்டறை மற்றும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும், சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியும் இணைந்து, வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு ``டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்’’ துறையில் பயிற்சிபட்டறை மற்றும் கருத்தரங்கு வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டப் பயிற்சி.

டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் -ன் முதற்கட்டப் பயிற்சி மார்ச் 2018 முதல் ஜூலை 2018 வரை நடைபெற்றது. இப்பயிற்சியில் டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் -ன் இண்டஸ்ட்ரியல் டெக்ஸ்டைல்ஸ், அக்ரோ டெக்ஸ்டைல்ஸ், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் முறை பற்றிய வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. இதன் மூலம் சுமார் 300 தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர்.

இதன் மற்றொரு பகுதியாக, தமிழ்நாடு பஞ்சாலைக் கழக பணியாளர்களுக்கென்று குறிச்சி ஏர் ஜெட் நெசவுத் தறிகளைப் பயன்படுத்தி டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பொருட்கள் தயாரிக்கும் முறைகளைப் பற்றிய பின்வரும் பயிற்சி நடைபெற்றது.

  • தொழிற்சாலைகளுக்குச் சென்று பார்வையிடுதல்
  • டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி விளக்குதல்
  • டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிதல், மேலும் அதன் சந்தையைப் பற்றியும், சந்தைப்படுத்தும் யுக்திகள் பற்றியும் அறிதல் ஆகியவை அடங்கும்.
  • பின்பு வர்த்தகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோரிடம் சென்று கள ஆய்வு நடத்தி சந்தையின் திறன் பற்றி அறிய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டப் பயிற்சி

``ஜியோசிந்தடிக்ஸ்’’ துறையின் நவீன வளர்ச்சியை பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் ஜவுளி, சிவில் & ரியல் எஸ்டேட் துறையினருக்கு பயிற்சியளிப்பதும், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் முதற்கட்டப் பயிற்சியில் பங்கேற்ற தொழில் முனைவோருக்கு தொழில் திட்டத்தைத் திட்டமிட்டு செயல்படுத்துவதற்கான தொடர் வகுப்புகள் அளிப்பதும் கருத்தரங்கின் இரண்டாம் கட்டப் பயிற்சியில் உள்ளடங்கும். 

``ஜியோசிந்தடிக்ஸ்’’ தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு 19.12.2018 அன்று நடைபெற உள்ளது. இப்பயிற்சியை அளிக்க உற்பத்தியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி கழகங்கள் போன்றவற்றிலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். மும்பை டெக்ஸ்டைல்ஸ்
ரிசர்ச் அசோசியேஷன் (க்ஷகூசுஹ) மும்பை, இந்திய சணல் ஆராய்ச்சி சங்கம் (ஐதுஐசுஹ), ஜியோ சிந்தடிக்ஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் ஐ.ஐ.டி.டெல்லி ஆகியவற்றிலிருந்து கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் வரவிருக்கிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டுத் துறை நிர்வாகிகள், கட்டிடத்துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், ஜவுளி மற்றும் சிவில் சங்கங்கள், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ரியல் எஸ்டேட் சங்கங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தொழில் முனைவோர் இதன் பங்கேற்பாளர்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

இக்கருத்தரங்கில் பங்குபெற முன்பதிவு அவசியம். பதிவுக் கட்டணம் இல்லை. இக்கருத்தரங்கு பங்கேற்பாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவையும், அத்துறையில் தொழில் செய்யும் வழிமுறைகளையும் வழங்கும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி ஹோட்டல் அம்பாசடர் பல்லவா, எழும்பூர், சென்னையில் நடைபெறும்.

  • நாள்.19.12.2018
  • பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை. 150 மட்டும்
  • தொடர்புக்கு. 8870479671 / 9791903909
  • நிகழ்ச்சியில் பங்கு பெற.
  • ஒருங்கிணைப்பாளர் திருமதி ஆர். அனிதா,
  • அலைபேசி எண்.9791903909
  • மேலும் விவரங்களுக்கு.www.svpistm.ac.in-ஐ பார்வையிடவும். 

Trending News