தொடர் போராட்டகளத்தில் இருந்த பட்டாசு தொழிலாளர் போராட்டம் வாபஸ்!

கடந்த 25 நாட்களாக நடந்த பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியுள்ளனர். வருகின்ற திங்கள் முதல் இயங்கும் என தெரிவிப்பு.

Last Updated : Jan 20, 2018, 10:23 AM IST
தொடர் போராட்டகளத்தில் இருந்த பட்டாசு தொழிலாளர் போராட்டம் வாபஸ்! title=

சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விருதுநகர் மாவட்ட பட்டாசு தயாரிப்பாளர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை இரவு திரும்பப் பெற்றனர். இதையடுத்து பட்டாசு ஆலைகள் ஜன., 22-ம் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்கவேண்டும் என கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், தில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இது குறித்து 4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பட்டாசுக்கு தடை விதித்துவிடுமோ என்ற அச்சத்தில், நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு எந்தவித ஆர்டர்களும் கொடுக்கவில்லை. இதனால், பட்டாசு ஆலைகள் நிரந்தரமாக மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களித்து மத்திய அரசு சட்டதிருத்தம் கொண்டுவர வலியுறுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 870 பட்டாசு ஆலைகளை மூடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 24 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த போராட்டம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து வெள்ளிக்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது. 

இதையடுத்து பட்டாசு ஆலைகள் ஜன., 22-ம் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News