கீழ்மட்ட தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி அதிமுக மட்டுமே: ஜெயக்குமார்

கொடி கட்டிய தொண்டரும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில் மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்!!

Updated: Jul 7, 2019, 11:36 AM IST
கீழ்மட்ட தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி அதிமுக மட்டுமே: ஜெயக்குமார்

கொடி கட்டிய தொண்டரும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுகவில் மட்டுமே என அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்!!

சென்னை கிண்டியில் இரட்டை மலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் கீழ்மட்ட தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி அதிமுக தான் என பெருமிதமாக கூறியுள்ளார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில்; கீழ்மட்ட தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி அதிமுக தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொடிகட்டிய தொண்டரும் கொடி கட்டிய காரில் செல்வது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், ராஜ்யசபாவிற்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவருக்கு எம்பி பதவி கொடுத்ததற்காக திமுக உள்நோக்கம் கற்பிக்கிறது. அவர்களும் இஸ்லாமிய சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்க மாட்டார்கள், அதிமுக கொடுப்பதையும் தடுக்க நினைக்கிறார்கள். திமுகவை போல நாங்கள் வாரிசுகளுக்காக, மன்னராட்சி நடத்தவில்லை. இங்கே உழைப்பவர்கள் உயர்வார்கள், என்றார்.

முகிலன் கண்டுபிடிக்கப்பட்டதில், தமிழக காவல்துறை தாமதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, நீங்கள் சொல்வது தவறு. என்ன நடந்தாலும் அதிமுக ஆட்சிதான் பொறுப்பு என்று குற்றம் சாட்டுவது வழக்கமாகிவிட்டது. அந்த அடிப்படையில்தான் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஆட்சி மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சிபிசிஐடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீதிமன்றமும் தெரிவித்திருந்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.