நீலகிரி மாவட்டம் குன்னூர் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலைப் பறிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எங்கிருந்தோ கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் 200 மீட்டர் தொலைவில் இருந்து பறந்து வந்து தேயிலை தோட்டத்தில் விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் படிக்க | குரங்கின் தாகத்தை தீர்த்த போலீஸ், மனதை உருக்கும் வைரல் வீடியோ
பிறகு அங்கு வந்த இளைஞர்கள் சிலர், அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெறுவதாகவும், அதில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தேயிலைத் தொழிலாளர்களிடம் கூறினர். இதனால் நிம்மதி அடைந்த அவர்கள், மீண்டும் தேயிலைப் பறிப்பில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்பட சூட்டிங் களைகட்டியுள்ளது.
தற்போது உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதி தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுன் நடிக்கும் தெலுங்கு பட சூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்தப் படத்தின் சண்டைக் காட்சியில்தான் கார் ஒன்று பறந்துவந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்துள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | லாரி மீது கார் மோதி விபத்து : 5 பேர் உயிரிழந்த சோகம்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR