நடராஜனுக்கு அறுவை சிகிச்சை அளிக்க, செய்த அவசர ஏற்பாடுகளை, ஜெயலலிதாவிற்கு, சசிகலாவின் குடும்பம் ஏன் செய்யவில்லை?' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
திரு. நடராஜன் அவர்களுக்கு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை அவரது தனி மனித உரிமை.ஆனால் அது பல உண்மைகளை உலகரியச் செய்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் சட்ட விதிகளுக்குட்பட்டே நடந்துள்ளது என சொல்லப்பட்டாலும் இந்த உதாரணம் எப்படி ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது.
நடராஜன் அவர்களை விமர்சனம் செய்வது நமது நோக்கமல்ல, அது நடைபெற்ற விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. திரு. நடராஜனுக்கு இவ்வளவு பெரிய அசாதாரண முயற்சிகளை எடுத்து அவருக்கு ஆபரேஷன் நடத்திய சசிகலா குடும்பம். இதே போன்ற சிறப்பான / அதிவேக ஏற்பாடுகளை முன்னாள் முதல்வருக்கு ஏன் செய்யவில்லை இதே வேகத்தையும், விவேகத்தையும் ஜெ அவர்களின் உடல் நிலையில் காட்டியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பாரோ? என்ற கவலை நமக்கு வருகிறது ஏனென்றால் ஜெ உடல் நிலையை கடைசி காலங்களில் சசிகலாவின் உறவு டாக்டர்களின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்பது நிதர்சனம்.
தமிழிசையின் பிற கேள்விகள் :
அரசு மருத்துவமனைக்கும் வரும் ஏழை எளியவர்களின் உடலுறுப்புகள் ஏன் தனியார் மருத்துவமனைக்கே அதிகம் பயன்படுகிறது? அவை ஏன் அரசு மருத்துவமனைகளில் முறையாக ஏழைகளுக்கு பயன்படுத்துவதில்லை? தஞ்சை மருத்துவக்கல்லூரி உடலுறுப்பு மாற்று ஆபரேஷன் நடைபெற்று வந்தது ஏன் நடைபெறுவது நிறுத்தப்பட்டது அங்கேயே உடலுறுப்புகளை ஆபரேஷன் செய்து அகற்றாமல் சென்னைக்கு குளோபல் மருத்துவமனைக்கு ஏன் மூளைமரணம் அடைந்தவர் எடுத்து வரப்பட்டார் அவர் விமானத்தில் வந்தபோது அவருடன் ஏன் அரசு மருத்துவர்கள் / அரசு பணியாளர்கள் பயணித்தார்கள்? தஞ்சை மருத்துவமனையில் மூளைமரணம் பதிவு செய்யப்பட்டதா ? அங்கு அவருக்கு முறையான சிகிசைகள் அளிக்கப்பட்டதா? சிறப்பு நிபுணர்கள் ஆலோசனை பெறப்பட்டது? தஞ்சாவூரில் சென்று உடலுறுப்பு வியாபாரம் பேசியவர்கள் யார் அரசு தரகர்கள் உள்ளனரா? விசாரிக்க வேண்டும்.
இதேபோல் ஸ்டான்லி மருத்துவமணையில் நடந்து வந்த கல்லிரல் மாற்று சிகிக்சை / ராஜிவ் அரசு மருத்துவமனையில் நடத்த இருதயமற்று அறுவை சிகிக்சை போன்ற வசதிகள் ஏன் நின்றுபோனது ? அதற்க்காக அரசு செய்த முதலீட்டு செலவினங்கள் ஏன் வீணடிக்கப்பட்டது. எதற்கு யார் பொறுப்பு ? ஏழை எளிய மக்கள் மாற்று உறுப்புகள் சிகிசைக்கு ஏன் தனியார் மருத்துவமனைகளை மட்டும் நம்பியிருக்கவேண்டும்? முதல்வர் காப்பீட்டு நிதியில் பெரும்தொகை ஏன் தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டுள்ளது.குளோபல் / அப்போல்லோ மருத்துவமைகளில் இதுவரை நடந்த கல்லிரல், இதயம், நுரையீரல் மாற்று சிகிசைகளின் பயனாளிகள் யார்? யார் ? விசாரித்தால் அதில் வெளிநாட்டினர், வெளிமாநிலத்து பயனாளர்களே அதிகம் என்பதும் தெரியவரும். இதில் எவ்வளவு வியாபாரம் நடந்துள்ளது. எந்தந்த அரசு மருத்துவமைகளில் இருந்து ஏழைகளின் உடலுறுப்புகள் பெறப்பட்டது. இதற்கு உடந்தையா? என்பது விசாரிக்கப்படவேண்டும்.
திரு.நடராஜன் அவர்களுக்கு ஏற்க்கனவே அவரது உறவினர்கள் தானம் செய்ய தமிழக அரசின் உடலுறுப்பு தான கண்காணிப்பு குழு அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஏன் அவரது உறவினர்கள் இருந்து தானம் பெறப்படவில்லை. தஞ்சையில் இருந்து ஏழை ஒருவர் வந்ததின் பின்புலம் என்ற கேள்வி ஒரு பக்கம், இதுபோன்ற செய்திகள் சந்தேகங்கள் கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கிறது. இது தெளிவுப்படுத்த வேண்டும்.
நமது விமர்சனம் தனிமனிதரை பற்றியது அல்ல. அதன் மூலம் வெளிவந்த உடலுறுப்பு வியாபார தந்திரம். தனியார் மருத்துவமைகளின் அரசு மருத்துவ மனைகளின் ஏழைகளுக்கு இதுபோன்ற ஆபரேஷன்கள் நடைபெறுவதில்லை என்ற ஆதங்கம். இதே போல் ஜெ வை காப்பாற்ற அதிதீவீர ஏற்பாடுகள் ஏன் நடக்க வில்லை என்ற வருத்தமுமே நான் எழுப்பும் கேள்விகளுக்கு கரணம். முறையான விசாரணை நடக்க வேண்டும். அப்போது தான் பல உண்மைகள் வெளிவரும். ஏதன் மூலம் அரசு மருத்துவமனைகள் எல்லாம் அப்போல்லோ / குளோபல் ஆக மாறமுடியும் மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.
இவ்வாறு Dr.தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.