அதிமுக குடுமி பாஜக கையில் - திருமாவளவன் அதிரடி

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவின் குடுமி பாஜக கையில் உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிண்ட் ஹலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 24, 2022, 06:58 PM IST
  • பாஜகவினரை கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
  • ஓபிஎஸ் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார்
 அதிமுக குடுமி பாஜக கையில் - திருமாவளவன் அதிரடி

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜகவினைரை கைது செய்ய வேண்டும் என 500க்கும் மேற்பட்ட  இஸ்லாமியர்கள் போரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மக்களின் உணர்வுகளை மதிக்க தெரியாத அரசு பாஜக. விவசாயிகளின் போராட்டத்திற்குகூட ஓராண்டு காலம் கழித்துதான் செவி கொடுத்தார்கள். இந்து சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள்தான் அதிக அளவில்  அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள். பிடிவாதமாக அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தீருவோம் என பாஜக சொல்வதை  விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் படிக்க | சூரியின் ஹோட்டலை திறந்துவைத்த அமைச்சர்

அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் இங்கே வலிமை பெறும், அதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக குடுமி பாஜகவிடம் உள்ளது என்பதுஅனைவரும் அறிந்த உண்மை.அதை உறுதிப்படுத்தும் விதமாக பொதுகுழு கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸை சிடி ரவி மற்றும் அண்ணாமலை சந்தித்தனர். 

இது அதிமுகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்க்கும் நல்லது அல்ல. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வரலாம் ஆனால்  பாஜக தலைமையாக இருக்கக்கூடாது” என்றார்.

மேலும் படிக்க | பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க நடவடிக்கை - உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

முன்னதாக சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்களில் ஒற்றைத் தலைமை குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அதிருப்தியடைந்த ஓபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

ADMK

இதனையடுத்து நேற்று இரவு ஓபிஎஸ் தனது தரப்பினருடன் டெல்லி சென்றார். டெல்லியில் ஓபிஎஸ்ஸின் மூவை எடப்பாடி பழனிசாமியின் தரப்பு தீவிரமாக கண்காணித்துவருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் காட்சிகள் மாறுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடத்தில் எழுந்திருக்கிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News