MK Stalin உடலினை கட்டுக்கோப்பாக, ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனது உடல் நலத்தை பாதுகாப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) தனி கவனம் செலுத்துவது வழக்கம். வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிளிங் செல்வது மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வை மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் சைக்கிளிங் செல்லும் போது நடிகை யாசிகா ஆனந்த் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
தற்போது தனது வீட்டில் மு.க. ஸ்டாலின் தொலைக்காட்சியில் செய்தியை பார்த்துக் கொண்டே உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வாக்கியங்களை தமிழக மக்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக உடற்பயிற்சி செய்யக் கூடிய இந்த வீடியோ, இன்றைய தினம் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோவாகவும் அமைந்துள்ளது.
TN Chief Minister Workout Video Goes Viral @mkstalin pic.twitter.com/8BupOjuhfo
— RJ RaJa (@rjrajaoffl) August 21, 2021
நேற்று பிரபல TI Cycles நிறுவனம் தனது புதுமுக இ-சைக்கிள் ஒன்றை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்ககியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த TI Cycles Montra இ-சைக்கிளின் விலை ரூ. 27,279 ஆகும். இதனை அலாய் ஃப்ரேமைக் கொண்டு நிறுவனம் கட்டமைத்திருக்கின்றது. மேலும், பல புதிய அம்சங்கள் இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
ALSO READ பள்ளி, தியேட்டர் திறப்பா? கூடுதல் ஊரடங்கு தளர்வுகளா? முதல்வர் இன்று ஆலோசனை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR