தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது 'அரியர்' விவகாரத்தை முடித்து வைத்த நீதிமன்றம்

அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை. தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 22, 2021, 05:06 PM IST
தேர்வு எழுதாமல் சான்றிதழ் வழங்கக்கூடாது 'அரியர்' விவகாரத்தை முடித்து வைத்த நீதிமன்றம்

சென்னை: இன்று அரியர் தேர்வு ரத்து குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில், "அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். மேலும் தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

முன்னதாக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிக அளவில் இருந்ததால், கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதாவது பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதிப்பருவத்தை (Semester Exam) தவிர மற்ற பருவத்தில் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அரியர்ஸ் மாணவர்கள் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தாலே "பாஸ்" ஆனதாக தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவ-மாணவிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனால் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் "பாஸ்" என அறிவிக்கப்பட்டு வெளியான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை  உயர் நீதிமன்றம், அரியர் தேர்வு ரத்தை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி இடைக்காலத் தடை விதித்தது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும், அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் விவரம் மற்றும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் விவரம் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில், "அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். மேலும் தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News