தமிழகத்தில் ‘இந்த’ 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 12, 2021, 04:38 PM IST
தமிழகத்தில் ‘இந்த’ 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்  title=

சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் காரணமாக, மாநிலத்தின் நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் சேலம், தர்மபுரி, ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்.

ALSO READ | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

நாளை மற்றும் நாளை மறு தினம் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் சில உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வரும் 15ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்  பலத்த மழையும், வட உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை அறிக்கை கூறுகிறது.

தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள் , அந்தமான் கடல் பகுதிகளில், 13ஆம் தேதி வரை  பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 13ஆம் தேதி வரை  வங்க கடலின் மத்திய மேற்கு பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என  எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News