ஸ்டெர்லைட் திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: TNGovt

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக முதலவர் தெரிவித்துள்ளார்...

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 15, 2018, 02:36 PM IST
ஸ்டெர்லைட் திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு: TNGovt
Representational Image

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக முதலவர் தெரிவித்துள்ளார்...

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் மே 22 ஆம் தேதி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை எதிர்த்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பித்தது தமிழக அரசு. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டற்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் இருந்து வருகிறது. 
 
அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுசூழல் மாசு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மேகாலயா மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

அதன்படி, தருண் அகர்வால் குழுவினர் ஆய்வு செய்து கடந்த 26 ஆம் தேதி தங்களது அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தனர். அதில், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்றும், ஆலையை மீண்டும் திறக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று சில நிபந்தனைகளுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா குழுமத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.