கொரோனா ஊரடங்கு மத்தியில் நெய்வேலி TASMAC கடைகளில் இருந்து விலையுர்ந்த மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ள விஷயம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
நெய்வேலியில் உள்ள தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தின் (TASMAC) இரண்டு விற்பனை நிலையங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை இரவு சுமார் ₹2.30 மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்களை(IMFL) எடுத்துச் சென்றுள்ளனர்.
கடைகளின் ஷட்டரின் பூட்டுகள் உடைந்திருப்பதை உள்ளூர்வாசிகள் கண்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
காவல்துறை கூற்றுப்படி, முறையே ₹1.70 லட்சம் மற்றும், ₹60,000 மதிப்புள்ள இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான பாட்டில்கள், நெய்வேலி ஊமங்கலம் காவல் சரகம், இருப்பு ஊராட்சி, கிழக்கிருப்பு கிராமத்தில் உள்ள TASMAC மற்றும் நெய்வேலி, தொ்மல் காவல் சரகம் 21-ஆவது வட்டத்தில் உள்ள TASMAC கடையில் இருந்து களவாடப்பட்டுள்ளது.
இரண்டு விற்பனை நிலையங்களும் முக்கியமான பாதைகளில் அமைந்துள்ளன, தற்போதைய கொரோனா முழு அடைப்பு காரணமாக திருடர்கள் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.