உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்கள் சந்திப்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை: வைகோவின் மகனுக்கு மதிமுகவில் இளைஞரணி செயலாளர் பதவி கிடைக்கும் என்று பேசப்பட்ட நிலையில், அதுக்குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மதிமுக பொதுச்செயலாளர் தனது வாக்கினை செலுத்திய பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மதிமுக பொதுச் செயலாளர் தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை கோரப் படுகொலை தாலிபான்கள் செயல்பாடுகளை போல் இங்கு செய்து உள்ளனர். இதற்கு மன்னிப்பே கிடையாது. நீதிமன்றத்தை கூட அவர்கள் மதிக்கவில்லை என்று கூறினார்.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடைய ஊர் ஒற்றுமையாக உள்ளதாகவும், அதற்கு என்னுடைய மகன் காரணம் எனவும் தெரிவித்தார். மேலும் என்னுடைய மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என்னுடைய வாழ்க்கையை 56 வருடமாக அரசியலில் கழித்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளேன்.
அதனால் நான் பட்ட கஷ்டத்தை என் மகன் பெற வேண்டாம் என நான் நினைக்கிறேன். ஆயினும் 20 ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR