வள்ளலார் பிறந்தநாள் முப்பெரும் விழா: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வக்பு வாரியம் தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 ஆயிரம் கோடிக்கு மேலான இந்து அறநிலையத்துறையின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 21, 2022, 03:14 PM IST
  • கன்னியாகுமரி முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகத்தை தமிழக வக்பு வாரியம் ஏற்றது
  • 3,000 வீடுகள், விளைநிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமா என வட்டாட்சியர் விசாரணை
வள்ளலார் பிறந்தநாள் முப்பெரும் விழா: அமைச்சர் சேகர்பாபு பேட்டி  title=

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ' வள்ளலார் -200 ' எனும் பெயரில் முப்பெரும் விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு.,

ஆன்றோர் சான்றோர் அனைவருக்கும் விழா எடுத்து வருகிறோம் , தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது , விரைவில் முதல்வர் வரைபடத்தை பார்த்து ஒப்பிதல் வழங்கிய பிறகு பணிகள் தொடங்கும். வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5 ஆம் தேதி 'தைக் கருணை ' நாளாக முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார்.

மேலும் படிக்க | திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

'வள்ளலார் -200' எனும் பெயரில்   முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. வள்ளலார் பிறந்தநாள் , வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156 ஆம் ஆண்டு, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. வள்ளலார் பக்தர்கள் இதில்  பங்கேற்க உள்ளனர். அன்றைய தினத்தில் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. 

இந்து அறநிலையத்துறை சொத்துகள் யார் வசம் இருந்தாலும் அவை மீடகப்படும், இந்த ஆட்சியில் இதுவரை இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகள்  மூன்றாயிரம் கோடிக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது. ரேவர் கருவி மூலம் இந்து அறநிலையத்துறை நிலங்களை அளவீடு செய்து வருகிறோம். இதுவரை  80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்  அளவீடு  செய்துள்ளோம். இந்து அறநிலையத்துறை சொத்துகள் கண்டறியப்பட்டு அவற்றை பாதுகாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தாமன சொத்து பட்டியல் முழுமையாக வெளியிடப்படும்.

வக்பு வாரியம்  தங்களது சொத்துகள் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து விசாரிக்க சொல்லி இந்து அறநிலையத்துறை ஆணையாளர் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்ற பிறகு இந்த விசயத்தில் முழு கருத்தையும் தெரிவிப்போம் என்று கூறினார்.

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ளும் அமைப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News