வன பத்திரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் டிஸ்மிஸ் - அரசு நடவடிக்கை பின்னணி

மேட்டுப்பாளையத்தில் புகழ்பெற்ற வன பத்திரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் தற்காலிகமாக டிஸ்மிஸ் செய்தது இந்துசமய அறநிலையத்துறை 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 8, 2024, 10:18 AM IST
  • வனபத்ரகாளியம்மன் கோவிலில் தொடர் முறைகேடு
  • பரம்பரை அறங்காவலரை தற்காலிமாக நீக்கம் செய்தது அரசு
  • இதுவரை நான்கு பூசாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
வன பத்திரகாளியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் டிஸ்மிஸ் - அரசு நடவடிக்கை பின்னணி title=

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும்.  இந்த திருக்கோவிலின்  பரம்பரை அறங்காவலராக  வசந்தா என்பவர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் வசந்தா அவர்கள் மீது பல்வேறு முறைகேடுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அண்மையில் கோவில் பூசாரிகள் தட்டு காணிக்கையை முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பாக நான்கு பூசாரிகள் மீது பணத்தை கையாடல் செய்ததாகவும், அதற்கு பரபரப்பை அறங்காவலர் வசந்தா உதவியாக இருந்ததாக கோவில் செயல் அலுவலர் புகார் அளித்தார். இதன்பேரில் பூசாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க | அதிகாரக்குவிப்பின் பிரச்சனைகளை வெட்டவெளிச்சமாக்கும் நீட் தேர்வு! மு.க ஸ்டாலின் அதிரடி!

மேலும், பரபரப்பை அறங்காவலர் வசந்தா தலைமறைவாக உள்ளார். கோவில் திருப்பணியாளர்கள் நியமனத்திற்கு தடையாக இருந்தது தண்ணிச்சையாக பூசாரிகளை நியமித்தது, உறவினர்களை பூசாரிகளாக நியமித்தது,நிதி இழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட 23 ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டது.  இது குறித்து அறநிலையத்துறை விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் திருக்கோயில் நலனை கருத்தில் கொண்டு நிர்வாகத்தில் குறைபாடுகள் கடுமையாக இருந்ததால், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 பிரிவு 53 கீழ் கதற்காலிகமாக பரம்பரை அறங்காவலர் வசந்தா அவர்களை பதவி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மனிகன்டன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

பரம்பரை அறங்காவலர் வசந்தா மீது 23 முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் பரம்பரை அறங்காவலர் வசந்தா மேற்கொண்டு பணிகளை குறைவில்லாமல் செய்ய, பண்ணாரி அம்மன் கோவில் துனை ஆணையர் மேனகா என்பவர் அவரது பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பரம்பரை அறங்காவலர் பணிகளை அவர் தொடர்ந்து செய்வார் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வன பத்திரகாளி அம்மன் கோவிலில் உள்ள அலுவலகத்தில் துணை ஆணையர் மேனகா முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க | கரப்பான் பூச்சி போல டி.வி.எஸ் 50 பைக்கில் வலிப்பு டான்ஸ் போட்ட புள்ளிங்கோ....

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News