மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர விஜய் மக்கள் இயக்க தலைவர் சோலை முத்து தலைமையில் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்த்தவர்கள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஆர்ப்பட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
ஆர்பாட்டத்திற்காக கூடியவர்கள் திடீரென அருகில் இருந்த பேருந்து நிலைய வணிக வளாகத்திற்குள் நுழைந்த அவர்கள் நடிகர் விஜய் திரைப்படங்களில் செய்வது போல கடைகளில் கடைகளில் சோதனை நடத்த தொடங்கினர்.
அப்பொழுது ஒரு குறிப்பிட்ட கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு கடை உரிமையாளரும் தனது கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதில்லை எனவும், நீங்கள் கொண்டு வந்திருப்பது தனது கடையில் வாங்கப்பட்டதில்லை எனவும் கூறியதால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது.
ALSO READ | வனிதா Vs ஜூலி: களைகட்டப்போகும் பிக்பாஸ் அல்டிமேட்..!
இந்நிலையில் போராட்ட பாதுகாப்பிற்கு வந்த போலீசார் சோதனையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களிடம் போராட்டத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு, இப்படி சோதனை செய்வது முறையல்ல என எடுத்துரைத்து கேட்காத ரசிகர்கள், தங்களுடன் சுகாதார ஆய்வாளர் ஒருவர் வந்திருப்பதாகவும் அவருக்கு உதவியாக தாங்கள் சோதனையில் ஈடுபட்டதாகவும் குரலை உயர்த்தினர்.
நிலைமையை சுதாரித்து கொண்ட போலீசார் சற்று கடுமையாக சோதனை நடத்த முறையான அனுமதி பெற வேண்டும் எனவும் உங்கள் மீது கடைக்காரர் புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் கூறவே ஒவ்வொருவராக அங்கிருந்து மறையத்தொடங்கினர். அளப்பறையுடன் தொடங்கிய சோதனை போலீசாரின் எச்சரிக்கையை அடுத்து அமைதியாக கலைந்து சென்றனர்.
உசிலம்பட்டியில் குட்கா உள்ளியிட்ட போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்த விஜய் ரசிகர்கள் கடைகளுக்குள் புகுந்து சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜீ தமிழ் செய்திகளுக்காக ஜாபர்……
ALSO READ | Bigboss: பற்றவைக்க தயாராகும் சுரேஷ் தாத்தா.. ஆட ரெடியாகும் அபிராமி..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR