விஜயகாந்த், பிரமேலதா பிடிவாரண்ட்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

Last Updated : Jul 28, 2016, 01:22 PM IST
விஜயகாந்த், பிரமேலதா பிடிவாரண்ட்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவைக் குறித்து அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 2 பேரும் நான்கு முறையும் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் நீதிபதி அலமேலு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், திருப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுக்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.தன்மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனு மீது விசாரணை நடத்தி கூறியதாவது:- அரசை விமர்சிப்பது எப்படி அவதூறாகும்? பழிவாங்கும் ஆயுதமாக அவதூறு சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது.ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்குப் பட்டியலை 2 வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். விஜயகாந்த், பிரேமலதா மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கூறினார். மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More Stories

Trending News