நலம் பெற வேண்டிக்கொண்டவர்களுக்கு நன்றி - விஜயகாந்த் உருக்கம்

தன்னுடைய உடல்நலம் குறித்து விசாரித்தவர்களுக்கும், நலம் பெற வேண்டிக்கொண்டவர்களுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 25, 2022, 05:27 PM IST
  • கால் விரல்கள் அகற்றப்பட்ட விஜயகாந்த் வீடு திரும்பினார்
  • உடல்நலம் விசாரித்தவர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்துள்ளார்
நலம் பெற வேண்டிக்கொண்டவர்களுக்கு நன்றி - விஜயகாந்த் உருக்கம் title=

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலம் குன்றி இருக்கிறார். அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் வீட்டிலேயே ஓய்வில் இருந்தார்.

இந்தச் சூழலில் விஜயகாந்த்துக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டன.தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவர் இன்று வீடு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய உடல்நலம் தேற வேண்டுமென்று வேண்டிக்கொண்டவர்களுக்கும், நலம் விசாரித்தவர்களுக்கும் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Vijayakanth

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தொலைபேசி வாயிலாகவும், டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் எனது உடல் நிலை குறித்து நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தொலைபேசி வாயிலாக விசாரித்த மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் படிக்க | அக்னிபாத் திட்டம் - தமிழக காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது?

தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா, பாமக தலைவர் அன்புமணிராமதாஸ்,

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், பார்த்திபன், நடிகை சரோஜா தேவி மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள், கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News