மத்திய அரசிற்கு அனுப்பப்பட்ட சாந்தன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே? நீதிமன்றம் கேள்வி!

Madras HC On Santhan Case: தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த சாந்தன் வழக்கு விசாரணை விவரங்கள்... 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Feb 13, 2024, 05:17 PM IST
  • தாயை கவனித்துக் கொள்ள அனுமதி கேட்கும் சாந்தன்
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
  • அடுத்த விசாரணை பிப்ரவரி 29
மத்திய அரசிற்கு அனுப்பப்பட்ட சாந்தன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் எங்கே? நீதிமன்றம் கேள்வி! title=

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

விடுதலை ஆனாலும், இலங்கை தமிழர் என்பதால் சாந்தன், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

உடல் ஆரோக்கியம் குன்றியுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் சாந்தன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க | சென்னை மழை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வைத்த குற்றசாட்டு!

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் சாந்தனுக்கு இலங்கை திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மத்திய அரசிற்கு அனுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்,  இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை என்பதால், தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

முன்னதாக, யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் சாந்தனின் தாயார், தனது மகன் சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும்படி தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், உடல் ஆரோக்கியம் குன்றியுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் சாந்தன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் பிப்ரவரி 29ம் தேதி அவருக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகளை மீறினால் சிக்கல்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News