திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்து வெளியே வந்த வைகோ, நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தனது மகன் துரை வைகோவை வேட்பாளராக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்த வைகோ திருச்சி தொகுதி என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து மதிமுகவின் தலைமையகமான தாயகத்தில் அக்கட்சி உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த வைகோ, மதிமுக வேட்பாளர் துரை வைகோ என அறிவித்தார்.
மேலும் படிக்க - பாஜக வேட்பாளர், தொகுதி பங்கீடு எப்போது நிறைவடையும்? வானதி சீனிவாசன் கொடுத்த அப்டேட்
பம்பரம் சின்னம் கிடைத்தால் துரை வைகோ அந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்றும், ஒருவேளை அந்த சின்னம் கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சுயேட்சை சின்னத்தில் நிற்போம் என வைகோ தெரிவித்தார். மேலும், சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார். திருச்சி திமுகவின் கோட்டை என்பதால் நிச்சயம் துரை வைகோ வெற்றி பெறுவார் என தெரிவித்த வைகோ, மதிமுகவும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யும் என தெரிவித்தார். மோடி பிம்பம் தமிழ்நாட்டில் எடுபடாது எனவும், திராவிட கொள்கை வழியில் உறுதியாக பயணிப்போம் என்றார்.
திமுக இந்த கொள்கை பயணத்தில் முன்னால் செல்லும், அவர்களுக்கு பக்கபலமாக நாங்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இருப்போம் என்றும் வைகோ கூறினார். எத்தமுறை மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் பாஜக இங்கு வெற்றி பெறாது என தெரிவித்தார். பாஜகவில் ரவுடிகள், பிக்பாக்கெட் திருடர்கள் மட்டுமே சேர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் கடுமையாக சாடினார். திருச்சி என்பது தாங்காக கேட்கவில்லை என்றும், யூகங்களின் அடிப்படையில் எல்லோரும் தெரிவித்த நிலையில் அதே தொகுதியை திமுக தலைமையும் ஒதுக்கிவிட்டதாக வைகோ கூறினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் வைகோ வாரிசு அரசியலை எதிர்த்து தான் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் பொதுக்குழு உறுப்பினர்கள் 400க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகினர். வைகோவை திமுகவில் இருந்து வெளியேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர் தீக்குளித்தனர். இப்படியான வரலாற்றை சுமந்திருக்கும் வைகோ, இப்போது தனது மகனையே வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய மதிமுகவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க - பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ