3 காரணங்களால் Bigg Boss-ல் இருந்து வெளியேறினார் சரவணன்?

பிக் பாஸ் தமிழ் 3-ல் இருந்து சரவணன் நீக்கப்பட்டிருப்பது நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Updated: Aug 6, 2019, 12:23 PM IST
3 காரணங்களால் Bigg Boss-ல் இருந்து வெளியேறினார் சரவணன்?

பிக் பாஸ் தமிழ் 3-ல் இருந்து சரவணன் நீக்கப்பட்டிருப்பது நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஆகஸ்ட் 5 திங்கள் அன்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் நிகழ்ச்சியின் கைதிகளிடம் விடைபெற ஒரு வாய்ப்பைக் கூட வழங்காமல் வாக்குமூல அறையிலிருந்து சரவணன் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

அவர் திடீரென வெளியேற்றப்பட்டதன் காரணத்தை தொலைகாட்சி தரப்பில் இருந்து இதுவரை வெளியிடவில்லை. எனினும் அவர் வெளியேற்றப்பட்டதன் பின்னணியில் மூன்று ஊக காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அவை முறையே...

  • காரணம் 1: 

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒளிப்பரப்பான எப்பிசோடில், சரவணன் தனது கல்லூரி நாட்களில் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றதாக தெரிவித்தார். சரவணின் கருத்திற்கு எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் எந்தவொரு வடிவத்திலும் பெண்களுக்கு எதிரான அவமரியாதை கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒரு செய்தியை மக்களுக்கு தெரிவிக்க விஜய் டிவி இந்த அழைப்பை எடுத்திருக்கலாம் என்று பலர் நம்புகிறார்கள். 

இதனால் சேனலைப் பற்றி பார்வையாளர்களின் மனதில் ஒரு நேர்மறையான பிம்பத்தை உருவாக்க முயலும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், சரவணன் ஏற்கனவே இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரியதாகவும், தவறு செய்து முடிந்து ஒரு வாரம் கழித்து இவ்வாறான முடிவு எடுப்பது நியாயம் அற்றது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • காரணம் 2: சேரனுடன் அவரது மோதல்

சேரனைப் பற்றி சரவணனின் அவமரியாதைக்குரிய கருத்துக்கள் அவரின் வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என ஒரு பகுதியினர் கருதுகின்றனர். நான்கு முறை தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநருக்கு மரியாதை காட்டாததால் பல பிரபலங்களும், குறிப்பாக திரைப்படத் தயாரிப்பாளர்களும் சரவணனை கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், குறிப்பிட்ட அந்த வார இறுதி எபிசோடில் கமல்ஹாசன் இந்த பிரச்சினைக்கு மத்தியரஸ்தம் செய்து பிரச்சனையை முடித்து வைத்தார். 

எனவே, பிக் பாஸ் தமிழிலிருந்து சரவணன் நீக்கப்பட்டதற்கு இது ஒரு உறுதியான காரணமாக இல்லாத பட்சத்திலும், ஒரு ஊக காரணமாக கருதப்படுகிறது.

  • காரணம் 3: சரவணன் கமலை அவமதித்தார்...

நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனை அவமதித்ததற்கு சரவணன் வெளியேற்றப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் கசிகிறது. முன்னதாக இறுதி நாள் எப்பிசோடில் கொடுக்கப்பட்ட டாஸ்கின் போது, கமல் ஹாசன் தெரிவித்த கருத்திற்கு, கமல்ஹாசனை இலக்காகக் கொண்ட ஒரு வேடிக்கையான கருத்தை சரவணன் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது, சரவணனின் இந்த செயல் அவரது வெளியேற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த ஊக காரணங்கள் இணையத்தில் பரவலாக பரவிக்கெண்டு இருந்தாலும், சரவணனின் வெளியேற்றுவதற்கான சரியான காரணத்தை தொலைக்காட்சியிடன் இருந்து மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.