மார்ச் 1-ம் தேதி முதல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து இருந்த நிலையில் ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில் ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளான தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரேஷனில் பொருட்கள் பெற மார்ச் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என கூறியுள்ளார். பெரும்பாலானோருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம். மேலும் பிப்ரவரி 28-க்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.