பார் புகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொரோனா 2வது அலை தொடங்கி, மிக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில்,   சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2021, 03:48 PM IST
பார் புகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது title=

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வளர்பிறை 5ம் நாளில் தொடங்கும், உலக பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா, இன்று மீனாட்சி அம்மன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலை தொடங்கி, மிக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில்,   சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது. எனினும்,  சுவாமி, அம்மன் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று காலை சுமார் 9.30 மணிக்குகொடியேற்றம்  மேல் கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை 6 மணி முதல் 9மணி வரையிலும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட போதிலும், கொடியேற்றத்தின் போது அனுமதிக்கப்படவில்லை.

கொடியேற்றத்திற்கு பிறகு, காலை 11.30 மணி முதல் 12 மணி வரையிலும், அனுமதிக்கப்பட்டனர். அதே போன்ற மாலை 4 மணி முதல் 5.30 மணி, இரவு 7.30 மணி முதல் 9 மணி என ஒன்றரை மணி நேரத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

இருப்பினும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர்,  10 வயதிற்குட்பட்டவர்கள்,  நோய்வாய்ப்பட்டவஎர் ஆகியோர் கோவிலுக்கு வர அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்குள் எங்கேயும் உட்காரவும் அனுமதியில்லை. மொபைல் போன்களுக்கும் அனுமதி இல்லை. 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் வரும் 22ஆம் தேதி  நடக்கும். 

24ம் தேதி காலை 8.45 மணி முதல் 8.50 மணிக்குள் ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் நடக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண நேரிடையாக காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கல்யாண நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்படும். எனவே  பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே இந்து சமயஅறநிலையத்துறையின்  வலைதளத்திலோ, உள்ளூர் தொலைக்காட்சியிலோ அல்லது யூ-டியூப் தொலைகாட்சியிலோ கண்டு ரசிக்கலாம்.

எனினும், திருக்கல்யாணம் முடிந்த பிறகு அம்மனை திருமணக்கோலத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ALSO READ | சித்திரை திருவிழா நடத்த அனுமதி கோரும் தமிழக கோவில் ஊழியர்கள் சங்கம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News