இளைஞரின் உயிரைப்பறித்த ஆன்லைன் ரம்மி! கடனை திருப்பி தரமுடியாமல் விஷம் குடித்த சோகம்!

அரக்கோணம் அருகே இளைஞர் ஒருவர் வாங்கிய கடனை திரும்ப தர முடியாத காரணத்தினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 13, 2023, 02:46 PM IST
  • ஆன்லைன் ரம்மியில் பணம் முதலீடு செய்துள்ளார்.
  • அதற்காக கடன் பெற்றுள்ளார்.
  • கடனை திருப்பி தர முடியாததால் தற்கொலை செய்துள்ளார்.
இளைஞரின் உயிரைப்பறித்த ஆன்லைன் ரம்மி! கடனை திருப்பி தரமுடியாமல் விஷம் குடித்த சோகம்!  title=

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இளைஞர் ஒருவர் தான் வாங்கிய 7 லட்ச ரூபாய் கடனை திரும்ப தர முடியாமல் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 

ஆன்லைன் விளையாட்டில் முதலீடு:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலம் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு 26 வயது ஆகிறது. திருமணமாத பி. சி. ஏ .பட்டதாரி வாலிபர் இவர். இவரது தந்தை தேவேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவரது தாயார் தக்கோலம் கூட்ரோட்டில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.  டிபன் கடையில் தாயாருடன் சேர்ந்து விஜயகுமார் வியாபாரத்தை கவனித்து வந்தார்.  மேலும் ஆன்லைனில் விஜயகுமார் ரம்மி விளையாடி வந்தார். விளையாடுவதற்கு போதிய பணம் இல்லாததால் பலரிடம் ரூபாய் 7 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார்.

மேலும் படிக்க | “ஜெயலலிதா சேலையை உருவியது மறந்துடுச்சா” வம்பிழுத்த நிர்மலா சீதாராமன்... பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

கடன் தொல்லை:

விஜய்குமார் ஆன்லைன் விளையாட்டிற்காக பலரிடம் கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், பணத்தை கொடுத்தவர்கள் திரும்பத் தருமாறு கேட்டு விஜயகுமாரிடம் நச்சரித்து வந்தனர்.  இதில் மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

உயிரிழப்பு:

விஜயகுமார் மயக்கம் போட்டு விழுந்ததை தாெடர்ந்து அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி விஜயகுமார் உயிர் இழந்தார். இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஆன்லைன் ரம்மியால் ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கி,  பணத்தை திருப்பி தர முடியாத விரக்தியில் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News