மினி கம்யூட்டர்போல் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் அனைத்து முக்கியமான தகவல்களும் கையடக்க கருவியான ஸ்மார்ட்போன்களிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன. எப்போதும் போன் கையிலேயே இருப்பதால், தகவல் திருட்டு பிரச்சனை இருக்காது. கம்யூட்டர் உள்ளிட்டவைகளில் தகவல்களை சேமித்து வைக்கும்போது பிறர் அதனை ஓபன் செய்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், ஸ்மார்ட்போன்களில் அத்தகைய பிரச்சனைகள் இல்லை. அதேநேரத்தில், ஹேக்கிங்கில் இருந்தும் போனை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு தெரியமலேயே ஸ்மார்ட்போனை ஹேக்கிங் செய்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருட முடியும். அந்தளவுக்கு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதால், அவற்றை சில விஷயங்களை அடிக்கடி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | மொபைல் நெட்வொர்க் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்
சாப்ட்வேர் புதுப்பிப்பு
எந்தவொரு ஹேக்கிங் அல்லது மால்வேர் தாக்குதலில் இருந்து தொலைபேசியைப் பாதுகாக்க சாப்ட்வேர் (மென்பொருள்) புதுப்பிப்பு மிக அவசியம். ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவ்வப்போது ஃபோனுக்கான புதுப்பிப்புகளை வெளியிடுகின்ற. அதில் ஸ்மார்ட்போன்களுக்கான பாதுகாப்பு இணைப்புகள் மற்றும் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் அந்த அப்டேட்டுகளில் இருக்கும். அதனை நாம் புறக்கணிக்காமல் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் போன் பாதுகாப்பாக இயங்குவதை உறுதி செய்து கொள்ள முடியும்.
பாதுகாப்பான செயலிகள்
Play Store மற்றும் App Store-ல் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான ஆப்ஸ்கள் உள்ளன. பாதுகாப்பை மனதில் வைத்து, தரமான செயலிகளை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் என்கிரிப்சன் செய்யப்பட்ட செயலிகள் மட்டுமே பிளே ஸ்டோரில் இருக்கும். என்கிரிப்சன் செய்யப்பட்ட செயலிகள் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். மேலும் உங்கள் சாட்டிங் தகவல்களை வேறு யாரும் அணுக முடியாது. ஆப்பிளின் iMessage மற்றும் Facebook-ன் WhatsApp ஆகியவை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை ஆதரிக்கின்றன.
அணுகல்களை தவிர்த்தல்
உங்கள் இருப்பிடம் முதல் தொடர்புகள் வரை, உங்கள் மொபைலில் இருந்து நிறைய டேட்டாவை செயலிகள் எடுத்துக் கொள்கின்றன. ஆனால், அந்த தகவல்கள் அனைத்து செயலிகளும் உபயோகப்படுத்துவதை அனுமதிக்க கூடாது. கேமரா மற்றும் கான்டெக்ட் தகவல்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட செயலிகள் மட்டுமே உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டும். அனைத்து டேட்டாக்களையும் கேட்கும் செயலிகள் பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது சிறந்தது. தேவையற்ற செயலிகளை உங்கள் மொபைலில் இருந்து நீக்குகள். பிளே ஸ்டோர் அல்லாத பிற இடங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.
மேலும் படிக்க | சந்தையை கலக்க வருகிறது ரூ.10,000-க்கும் குறைவான அசத்தல் போன்: கசிந்த விவரங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR