Jio vs Airtel vs Vi: கொரோனா காலத்தில், இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர தொலைதொடர்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் சந்தையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக இப்போது குறைந்த கட்டணத்தில் பயனர்களுக்கு அதிக தரவை வழங்கக்கூடிய திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
பயனர்கள் இப்போது அலுவலக வேலைகளுக்கு, பொழுதுபோக்குக்காக என தொலைபேசியில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதன்படி ஏர்டெல் (Airtel), ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), Vi ஆகியவற்றின் சிறந்த அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வோம், அவை ரூ .500 க்கும் குறைவாக வருகின்றன.
ALSO READ: Vi அதிரடி: ரூ .75 இலவச ரீசார்ஜ்; மிரண்டுபோன ஜியோ மற்றும் ஏர்டெல்
Airtel ரூ. 500 இன் கீழ் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல்லின் சிறந்த அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் திட்டம் ரூ .449க்கு வருகிறது. அன்லிமிட்டட் காலிங் , 2 ஜிபி FUP டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இது தவிர, இந்த ரூ .449 திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம், ஷா அகாடமி, விங்க் மியூசிக் போன்றவற்றுக்கான OTT சந்தா 1 வருடத்திற்கு அடங்கும்.
Jio ரூ. 500 இன் கீழ் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ரிலையன்ஸ் ஜியோவின் சிறந்த அன்லிமிட்டட் திட்டம் ரூ .444க்கு வருகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இதில் 2 ஜிபி டேட்ட, அன்லிமிட்டட் காலிங் , ஜியோவிலிருந்து ஜியோ அல்லாத எண்களுக்கு 2,000 FUP நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
VI ரூ. 500 இன் கீழ் ப்ரீபெய்ட் திட்டங்கள்
Vi இன் சிறந்த அன்லிமிட்டட் திட்டம் ரூ .449க்கு வருகிறது. இந்த சிறந்த அன்லிமிட்டட் ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் 4 ஜிபி எஃப்யூபி டேட்டவை பெறுகிறார்கள், இது இரட்டை டேட்டா சலுகையின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும் இதில் அன்லிமிட்டட் காலிங் வழங்குகிறது, இந்த வகையான 100 எஸ்.எம்.எஸ். இது தவிர, Vi மூவிஸ் மற்றும் டிவியின் OTT நன்மைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ALSO READ:Jio VS BSNL: எது மலிவான திட்டம், இதோ முழு விவரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR