Sony: இந்தியாவில் அறிமுகப்படுத்தும் Alpha 7R IV mirrorless camera

தொழில்நுட்பத்தால் அசத்தும் Sony நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் Alpha 7R IV mirrorless கேமராவின் சிறப்பம்சங்கள்...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2020, 09:11 PM IST
  • Alpha 7R IV mirrorless ரக கேமராவின் சிறப்பம்சங்கள்
  • Real-time Eye Auto Focus
  • 61.0 MP resolution கொண்டது
  • 35mm full-frame back illuminated CMOS சென்சார் பொருத்தப்பட்டது
Sony: இந்தியாவில் அறிமுகப்படுத்தும் Alpha 7R IV mirrorless camera   title=

புதுடெல்லி: Alpha 7R IV mirrorless ரக கேமராவை சோனி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சூப்பர் 35 மிமீ mode6, S-Log, HDR workflow ஆதரவு   கொண்ட pixel binning இல்லாத supports Professional 4K movie recording கொண்ட சிறப்பு ரக கேமரா இது.
 
புதிய ஆல்பா 7ஆர் IV 61.0 MP resolution கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக உருவாக்கப்பட்ட 35mm full-frame back illuminated CMOS சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, 5-axis optical in-body image stabilization system கொண்ட நவீன கேமரா இது. இதனால் 5.5-step அளவிலான shutter speed advantage கிடைப்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த புதிய Alpha 7R IV full-frame mirrorless camera மிகவும் தெளிவான படங்களை, குறிப்பாக 10 fps வரை உள்ள படங்களையும் தொடர்ச்சியாகவும், துல்லியமாகவும் Auto Focus/Automatic Exposure tracking மூலம் சுமார் 7 வினாடிகள் வரை எடுக்கக்கூடியது. அதோடு, full-frame, full- resolution mode (JPEG / RAW), அளவு துல்லியமான படங்களை எடுக்கக்கூடியது. தோராயமாக. APS-C என்ற crop mode-இல், 3x  விநாடிகளில் 26.2MP படங்களை வழங்கக்கூடிய தொழில்நுட்பம் வாய்ந்த கேமரா இது.

Super 35mm mode6, S-Log, HDR workflow support உடன், பிக்சல் பின்னிங் இல்லாத முழு பிக்சல் ரீட்அவுட் உள்ளிட்ட 4K movie recording திறன் கொண்ட்து இந்த நவீன கேமரா.

Real-time Eye Auto Focus கொண்ட Alpha 7R IV செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நிகழ்நேரத்தில் Eye Auto Focusஐ துல்லியமாக கொண்டு படங்களை எடுக்கிறது.  

Read Also | பாலிவுட்: சமூக ஊடகங்களின் 'paid followers' திடுக்கிடும் மோசடி அம்பலம்

இன்னும் இந்த கேமராவின் சிறப்புகள் முடியவில்லை. high-speed Wi-Fi மற்றும் wireless PC இணைப்பு ஆகியவற்றைத் தவிர, SuperSpeed USB (USB 3.2 Gen 1) USB Type-C connector ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.  இதனால், fast wired data வேகமாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.  

FTP data transfer பரிமாற்றத்தையும் கண நேரத்தில் செய்யக்கூடிய இந்த Alpha 7R IV mirrorless camera, புகைப்படக் கலைஞர்களுக்கு மிகவும் ஏற்றது.  இந்த புதிய கேமராவில் படங்களை எடுக்கும்போது அல்லது படங்களை மறுசீரமைக்கும்போது,  ஒரு குறிப்பிட்ட FTP remote serverக்கு படங்களை அனுப்பவும் உகந்த்தாக இருப்பது Alpha 7R IV mirrorless camera-வின் கூடுதல் சிறப்பு... 

Trending News