ஆப்பிள் நிறுவனம் தனது iPhone X-னை சந்தைப்படுத்த புதியதொரு முயற்சியை கையாண்டு வருகிறது. அதன்படி "Animoji" எனப்படும் வேடிக்கை வசதியினை தனது அடுத்த வரவான iOS 11.3-ல் உள்ளடக்கியுள்ளது.
புதிதாக களமிறங்கும் இந்த iOS 11.3 பதிப்பானது, புதிய ARKit அம்சங்கள் மற்றும் பேட்டரி மேலாண்மை வசதி ஆகியவற்றை பெற்றிருக்கும் என ஆப்பிள் நிறுவனம் உருதியளித்துள்ளது.
அது சரி, Animoji என்றால் என்ன?... emoji என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கின்றோம், ட்விட்டர் பேஸ்புக் என அனைத்து சாரளங்களிலும் இந்த emoji பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது.
முன்னதாக விடிவமைக்கப்பட்ட உருவங்களை கொண்டு அதனை நாம் தேவைக்கேற்றார் போல உபயோகித்துக் கொள்வது தான். சமீபத்தில் இளைய தளபதி விஜய் புகைப்படத்தினை மெர்சல் படத்தின் emoji-யாக ட்விட்டர் பயன்படத்தியது அனைவரும் அறிந்ததே.
இந்த emoji-யை Animation தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தினால். ஆம் அந்த வித்தையினை தான் iPhone-X உடன் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த Animoji தொழில்நுட்பத்தினை கொண்டு தங்களுக்கு பிடித்த emoji-னை தக்களுக்கு பிடித்த பாடலை பாடவைக்கலாம்.
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், உங்கள் குரலில், முக அசைவில் ஒரு நாய்குட்டியையோ, பூதத்தினையோ பாட வைக்கலாம்!