BSNL சிறப்பு தீபாவளி சலுகை, ரீசார்ஜ் செய்து 90% தள்ளுபடி பெறுங்கள்

BSNL அதன் பயனர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2021, 09:57 AM IST
BSNL சிறப்பு தீபாவளி சலுகை, ரீசார்ஜ் செய்து 90% தள்ளுபடி பெறுங்கள் title=

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தீபாவளியை முன்னிட்டு பயனர்களுக்கு சிறப்பான (Discount on Recharge) பரிசை வழங்கியுள்ளது. நிறுவனம் ஒரு சிறப்பு சலுகையை (BSNL Plans) அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த சலுகையின் கீழ், பயனர்கள் ரீசார்ஜ் செய்வதில் 90 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். நிறுவனம் தனது பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் பலனை எப்படிப் பெறுவது தொடர்பான விவரத்தை இங்கே அறிக. 

இதுபோன்ற 90% தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நீங்களும் BSNL பயனராக இருந்து, நிறுவனத்தின் புதிய BSNL FTTH திட்டத்தைப் (BSNL Broadband Plan) பயன்படுத்த விரும்பினால், நீங்கள் 90 சதவீத தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக அதன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்நிறுவனம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ALSO READ: ஷாக் கொடுத்த BSNL: இந்த மலிவு விலை பிளான் நீக்கப்பட்டது!!  

நீங்களும் இந்த தள்ளுபடி மற்றும் சலுகையைப் பயன்படுத்த விரும்பினால், இதற்காக நீங்கள் முதலில் BSNL இன் BookMyFiber போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும், அங்கு நீங்கள் BSNL FTTH ஐ முன்பதிவு செய்யலாம். இது தவிர, BSNL FTTH-ஐ நிறுவனத்தின் சேவை மையத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். நிறுவனத்தின் இந்த தீபாவளி ஆஃபர் நவம்பர் 1, 2021 முதல் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது நவம்பர் 1, 2021 முதல் நவம்பர் 29, 2022 வரை செயல்படும் புதிய BSNL FTTH இணைப்புகள் இந்தச் சலுகையில் 90% தள்ளுபடியைப் பெற முடியும்.

பயனர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்
தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் அனைத்து செயலில் உள்ள புதிய இணைப்புகளுக்கும் மாதாந்திர வாடகையில் 90 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பயனர்கள் FTTH திட்டத்தில் ரூ.500 வரை தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது முதல் மாதத்தில் ரீசார்ஜ் செய்தால் 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். BSNL இன் FTTH திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டம் தவிர நாட்டில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள பயனர்கள் 30mbps முதல் 300mbps வரை வேகத்தைப் பெறுகின்றனர். இதில் அதிவேக இணைய சேவையுடன் இலவச குரல் அழைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ: BSNL, Vi, Jio அட்டகாச ரீசார்ஜ் திட்டங்கள்: ஆண்டு முழுதும் கிடைக்கும் அதிரடி நன்மைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News