Redmi 10: அறிமுகத்துக்கு முன்பே Redmi 10 சிறப்பம்சம் லீக்

பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி 10 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2021, 12:33 PM IST
Redmi 10: அறிமுகத்துக்கு முன்பே Redmi 10 சிறப்பம்சம் லீக் title=

Redmi 10: ரெட்மி 10 ஸ்மார்ட்போன் NBTC சான்றிதழ் இணையதளத்தில் மாடல் நம்பர் 21061119AG உடன் காணப்பட்டது. இதன் மூலம் பட்ஜெட் விலை சியோமி ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில் NBTC சான்றிதழ் இணையதளத்தில் கசிந்த தகவலின் படி இந்த சியோமி ரெட்மி 10 (Redmi 10) ஸ்மார்ட்போன் விரைவில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாய்லாந்தில் அறிமுகமானவுடன் விரைவில் ரெட்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் உடனடி அறிமுகம் ஆகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | மிகவும் மலிவான விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட Xiaomi பட்ஜெட் ஸ்மார்ட்போன்

Redmi 10 ஸ்மார்ட்போன் Redmi Note 10 க்கு கீழ் அமரும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அம்சங்கள் (கசிந்த தகவலின் படி) 
இதில் 162 x 75.3 x 8.95 மிமீ இருக்கும் மற்றும் இது பாலிகார்பனேட் சேஸை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவிலான FHD+ பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும், இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகிறது.

கேமராவை பொறுத்தவரை 8 மெகாபிக்சல் முன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின் பக்க பேனலில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் ஒரு ஜோடி 2 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன.

இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12-ஐ கொண்டுள்ளது. இந்த லேட்டஸ்ட் ரெட்மி ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில், டூயல் சிம், வைஃபை 802.11ac, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள் அடங்கும். அது Carbon Grey, Pebble White மற்றும் Sea Blue போன்ற வண்ணங்களில் கிடைக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலையை வெளியான பட்டில் குறிப்பிடவில்லை.

ALSO READ | Redmi Note 10T 5G அட்டகாசமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் ஆனது: விலை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News