ரூ.16,000 மதிப்பிலான Realme ஸ்மார்ட்போனை ரூ.549க்கு வாங்குவது எப்படி?

16 ஆயிரம் மதிப்புள்ள Realme ஸ்மார்ட்போனை வெறும் 549 ரூபாய்க்கு வாங்க முடியும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 21, 2022, 04:54 PM IST
  • பிளிப்கார்ட்டில் அசத்தல் தள்ளுபடிகள்
  • ரியல்மி ஸ்மார்ட்போனுக்கு சலுகை
  • எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.549 க்கு வாங்கலாம்
ரூ.16,000 மதிப்பிலான Realme ஸ்மார்ட்போனை ரூ.549க்கு வாங்குவது எப்படி? title=

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் Realme சூப்பர் 9 Days விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மார்ச் 21 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் ​​Realme ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் ரியல்மியில் உள்ள பல அம்சங்களைக் கொண்ட போன்களையும் நீங்கள் குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக realme 9i ஸ்மார்ட்போனை வெறும் 549 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். மார்க்கெட்டில் அதன் மதிப்பு 15,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் படிக்க | ஐபிஎல் இலவசமாக பார்க்க ஜியோவின் எந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யலாம்?

Realme 9i சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

Realme 9i ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு கொண்ட வேரியண்ட் 15,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த போன் பிளிப்கார்ட் விற்பனையில் சுமார் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் ரூ.12,999க்கு கிடைக்கிறது. இது தவிர, போனில் வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளதால், தள்ளுபடி விலையிலும் நீங்கள் கூடுதல் தள்ளுபடிகளைப் பெற முடியும். இதன் மூலம் மிகமிக குறைந்த விலையில் ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனை வாங்கலாம். 

Realme 9i எக்ஸ்சேஞ்ச் சலுகை

Realme 9i ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மெகா தள்ளுபடி விற்பனையில் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் உள்ளன. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொள்ளும்பட்சத்தில் அதிகபட்சமாக, 12,450 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அந்தவகையில் முழுமையான தள்ளுபடி உங்களுக்கு கிடைத்தால், ரியல்மி9i ஸ்மார்ட்போனை வெறும் 549 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம்.

Realme 9i வங்கிச் சலுகை என்ன?

நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றாமல், அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகை பெறாமல் இதர தள்ளுபடிகள் மட்டும் வேண்டும் என்றால் 11,999 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.  ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் Realme 9i ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249: அசத்தும் பிளிப்கார்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News