தொழில்நுட்ப கோளாறால் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு...

சந்திரயான் - 2 விண்கலம் இன்று அதிகாலை ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காராணமா  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!!

Updated: Jul 15, 2019, 07:26 AM IST
தொழில்நுட்ப கோளாறால் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைப்பு...

சந்திரயான் - 2 விண்கலம் இன்று அதிகாலை ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காராணமா  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!!

நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் வெற்றித் திட்டமான சந்திரயான் - 1- ஐத் தொடர்ந்து, இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 திட்டம் வகுக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பான இந்த விண்கலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சினிலில் இயங்கும் GSLV மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவுக்கு பயணம் செய்ய இருந்தது. 

இதற்கான அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, இன்று அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு ஏவப்பட தயாராக இருந்தது. இந்நிலையில், கவுண்டவுன் நிறுத்தப்பட்டதாக, ராக்கெட் ஏவப்படுவதற்கு 14 நிமிடங்களுக்கு முன்னர் இஸ்ரோ திடீர் அறிவிப்பை வெளியிட்டது. கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ராக்கெட் ஏவும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், எப்பொழுது ஏவப்படும் என்பது பிறகு அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரனை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்‘ என்ற சாதனம், சந்திரனில் தரை இறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்‘ என்ற சாதனம், அங்கு தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்‘ என்ற சாதனம் என மொத்தம் 3 சாதனங்கள் சந்திரயான்-2 விண்கலத்தில் இடம்பெற்றுள்ளன. 

இந்த மூன்று சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்ப நிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.