பெட்ரோல் - டீசல் விலை விண்ணை முட்டுவதால், மக்கள் அதிக மைலேஜ் தரும் வாகனங்கள் மற்றும் எலக்டிரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெட்ரோல் விலை மக்களின் பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இதில் இருந்து விடுதலை பெற நினைக்கும் மக்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள், கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களை தயாரிக்கின்றனர்.
மேலும் படிக்க | குறைந்த விலையில் Honda பைக் வாங்க அரிய வாய்ப்பு
இப்போதைய சூழலில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். பைக்குகளில் நிறைய மின்சார வாகனங்கள் இருக்கும் நிலையில், மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று குறைந்தவிலையிலான மின்சார காரை உருவாக்கியுள்ளது. 4.5 லட்சம் ரூபாய் விலையில் இரண்டு பேர் அமரக்கூடிய காரை அந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஸ்டார்ட்அப் ஸ்டார்ம் R3
ஸ்டார்ம் மோட்டார்ஸ் என்ற மும்பை நிறுவனம் ஸ்டார்ட்அப் ஸ்டார்ம் R3 என்ற மலிவு விலையிலான மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை வெறும் 4.5 லட்ச ரூபாய். மும்பையை சேர்ந்த ஸ்டோர்ம் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளது, மேலும் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.10,000 டோக்கன் தொகையில் Storm R3-ஐ முன்பதிவு செய்யலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை ஓட்ட முடியும்.
டெல்லி வாடிக்கையாளர்கள்
முதற்கட்டமாக டெல்லி-என்சிஆர் மற்றும் மும்பை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கும் தகவல்களின்படி, மும்பை, தானே, நவி மும்பை, புது டெல்லி, குருகிராம் மற்றும் நொய்டா வாடிக்கையாளர்கள் தற்போது இந்த EV காரை வாங்கலாம். இந்த எலெக்ட்ரிக் கார் தோற்றத்தில் மிகவும் தனித்துவமாகவும், கவர்ச்சியாகவும் வடிவமைக்கப்படுள்ளது. காரில் மூன்று சக்கரங்கள் இருக்கும்.
மேலும் படிக்க | காற்றை விலைபேச வரும் ஹூண்டாய் MPV - மாருதி, கியா அதிர்ச்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR