Surprise Bonus: அடேங்கப்பா! லட்சக்கணக்கில் திடீர் போனஸ் கொடுக்கும் நிறுவனம்!

பணியாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கான தொகையை போனஸாக வழங்கும் நிறுவனம் இது... பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும் தொழில்நுட்ப நிறுவனம் இது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 06:14 AM IST
  • பொறியாளர்கள் நிறுவனத்தை விட்டுச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை
  • போட்டியாளர்களிடமிருந்து தொழில்நுட்பத்தை பாதுகாக்க முன்னெச்சரிக்கை
  • பொறியாளர்களுக்கு பொறி வைக்கும் Meta
Surprise Bonus: அடேங்கப்பா! லட்சக்கணக்கில் திடீர் போனஸ் கொடுக்கும் நிறுவனம்! title=

புதுடெல்லி: தொழில்நுட்பப் போட்டியாளர்களின் சூழ்ச்சியை தடுப்பதற்காக குறிப்பிட்ட சில வகை பணியாளர்களுக்கு புத்தாண்டுக்கு சிறப்பு போனஸ் வழங்கியிருக்க்கிறது இந்த தொழில்நுட்ப நிறுவனம்.
இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை. புத்தாண்டை ஆப்பிள் நிறுவனம் வித்தியாசமாக எதிர்கொள்ள இருப்பதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) அறிக்கை தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ்கள் $50,000 முதல் $180,000 வரையிலான மதிப்புள்ள பங்குகளின் வடிவத்தில் உள்ளன. இருப்பினும், பெரும்பாலான ஊழியர்கள் $80,000 இலிருந்து $120,000 வரை போனஸைப் பெறுகின்றனர்.
நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் பொறியாளர்களுக்கு இந்த சிறப்பு போனஸ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது, இது வழக்கமாக ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து போனஸ்களுக்கும் கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், ப்பிள் தனது பொறியாளர்களுக்கான இந்த சிறப்பு வெகுமதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக ஊடகங்கள் மூலம் அறிவிக்கவில்லை.

தொழில்நுட்ப உலகமான சிலிக்கான் பள்ளத்தாக்கில், மெட்டா, ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் (Meta, Apple, Google, Microsoft) போன்ற சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்ற போட்டி நிறுவனங்களின் பொறியாளர்களை அதிக சம்பளத்துக்கு வேலைக்கு எடுப்பதாக கூறப்படுகிறது.

READ ALSO | 625 ரூபாய்க்கு அட்டகாசமான போன்; வாயை பிளக்க வைக்கும் Offer

போட்டியாளர்களின் தொழில்நுட்ப அறிவை தங்கள் எதிர்காலத் தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த பொறியாளர் வேட்டை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில் Meta நிறுவனம், ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட பொறியாளர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது, அதே நேரத்தில் ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிளும், பேஸ்புக்கில் இருந்து ஒரு சிலரை கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளது.

பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, திறமையான தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக நிறுவனங்கள் சிற்றுண்டி பார்கள் மற்றும் வீட்டில் மசாஜ் வசதி என விதவிதமான வசதிகளை ஊழியர்களுக்கு வழங்குகின்றன. தொற்றுநோயால் பணிச்சூழல்கள் மற்றும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நிலைமை நீடிப்பதால் இந்தச் சலுகைகளில் பெரும்பாலானவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சொந்த மெட்டாவர்ஸை உருவாக்குவதால், அதிக விலைக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் சூழ்நிலை எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்டா மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டும் தங்கள் மெய்நிகர் ரியாலிட்டி தயாரிப்புகளில் தங்கள் இலக்குகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

தொழில்நுட்ப ஜாம்பவான்கள், எதிர் முகாமில் இருக்கும் நிபுணர்களை அதிக விலைக்கு பணியமர்த்தும் வாய்ப்புகளை தவிர்ப்பதற்காக புதுப்புது உத்திகளையும் கையாள்கின்றன.

Also Read | Alexaவில் மாற்றம் செய்த அமேசான்! 10 வயது சிறுமிக்கு கொடுத்த சேலஞ்ச்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News