ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாட்டிக்கையாளரின் தகவல் மற்றும் அவரது மொபைலில் சேமிக்கும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கத்தை உடனடியாக அளிக்க மத்திய அரசு 21 ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட் போன்களில் அதிகம் வாங்கப்படுபவை சீன ஸ்மார்ட், ஆப்பிள் மற்றும் மோட்டொரோலா போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களும் பலரால் விரும்பி வாங்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட் போன்களில் சேமிக்கப்படும் வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசுக்கு திடீர் அச்சம் எழுந்திருக்கிறது.
இதனால் மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விவோ (Vivo), ஒப்போ (Oppo), சியோமி (Xiaomi) உள்ளிட்ட 21 செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து வருகின்ற 28 தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு அந்த நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.