Jio சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை அதிகரிப்பதோடு, அதன் மூன்று பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 11:12 AM IST
Jio சைலெண்டாக செய்த வேலை: இனி இந்த 3 திட்டம் கிடையாது title=

புதுடெல்லி: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சில நாட்களுக்கு முன்பு உயர்த்தியது, இது டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவின் மூலம், மக்களால் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் பல நன்மைகளுடன் வரும் இதுபோன்ற மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் ஜியோ நிறுத்தியுள்ளது. அதன்படி ஜியோ நிறுத்திய ப்ரீபெய்ட் திட்டங்கள் எவை என்பதை விரிவாக காண்போம்.

ஜியோ தனது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்தியது
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஒருபுறம் அதன் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plans) விலையை உயர்த்தியுள்ள நிலையில், மறுபுறம் மூன்று திட்டங்களையும் நிறுத்தியுள்ளது. அவை ரூ.499, ரூ.666 மற்றும் ரூ.888 ஆகும். இந்த திட்டங்களை நிறுத்துவது குறித்து நிறுவனம் எந்த தனி அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த திட்டங்கள் என்ன நன்மைகளை வழங்கியது என்பதை பார்ப்போம்.

ALSO READ | Jio அளித்த அதிர்ச்சி: அடுத்தடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களில் அதிகரிப்பு

ஜியோ ரூ 499 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம், ரூ. 499 விலையில், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும், இதில் உங்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தில், பயனருக்கு அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் சந்தா வழங்கப்பட்டது.

ஜியோ ரூ 666 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் இந்த திட்டம் பயனருக்கு தினமும் 2ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் 56 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு போன்ற பலன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில், ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் அணுகல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் விலை ரூ.666 ஆனால் தற்போது இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜியோவின் ரூ.888 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தில், நிறுவனத்தின் சார்பாக, பயனர் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 888 ரூபாய்க்கு ஈடாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில், ஜியோ மியூசிக், ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளின் சந்தாவும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள்.

(இதுதான் ஜியோ நிறுத்திய மூன்று திட்டங்கள் ஆகும்.)

ALSO READ | 2021-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News