Jio அட்டகாசம்: இந்த ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கும் 20% cashback!!

ஜியோ சமீபத்தில் தனது இணையதளத்தில் இந்த தகவலை வெளியிட்டது. வாடிக்கையாளர்களுக்கு ரூ. 249, ரூ. 555 மற்றும் ரூ. 599 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் 20% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Oct 6, 2021, 03:28 PM IST
  • ஜியோ சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கேஷ்பேக் வாய்ப்பை வழங்கத் தொடங்கியுள்ளது .
  • ஜியோவின் ரூ. 249 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
  • ஜியோவின் 555 ரூபாய் திட்டம் உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
Jio அட்டகாசம்: இந்த ரீசார்ஜ் திட்டங்களில் கிடைக்கும் 20% cashback!!

Reliance Jio Cashbback Offer: ரிலையன்ஸ் ஜியோ இன்று நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அது தனது வாடிக்கையாளர்களுக்கு பல மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களது நன்மதிப்பை ஈன்றது. 

ஜியோவின் (Jio) அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. சமீபத்தில் ஜியோ அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கேஷ்பேக் வாய்ப்பை வழங்கத் தொடங்கியுள்ளது . அது பற்றி இந்த பதிவில் மேலும் தெரிந்து கொள்வோம்.

ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது
ஜியோ சமீபத்தில் தனது இணையதளத்தில் இந்த தகவலை வெளியிட்டது. வாடிக்கையாளர்களுக்கு ரூ. 249, ரூ. 555 மற்றும் ரூ. 599 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் 20% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த 20% கேஷ்பேக் பெற, பயனர்கள் MyJio app அல்லது Jio.com -க்கு செல்ல வேண்டும். 

இந்த கேஷ்பேக் தானாகவே பயனரின் ஜியோ கணக்கை சென்றடையும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த தொகையை மேலும் ரீசார்ஜ் செய்ய பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ALSO READ: Jio, Airtel மற்றும் Vi சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: பல நன்மைகளைப் பெறலாம் 

ஜியோ ரூ 249 திட்டம்

ஜியோவின் ரூ. 249 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு மற்றும் அனைத்து ஜியோ செயலிகளுக்குமான சந்தா ஆகியவற்றை பெறுவீர்கள். உங்கள் தினசரி தரவு தீர்ந்துவிட்டால், உங்கள் இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். இப்போது நீங்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 20% கேஷ்பேக்கையும் பெறலாம். 

ஜியோவின் 555 ரூபாய் திட்டம்

ஜியோவின் 555 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில், நீங்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அனைத்து ஜியோ செயலிகளுக்குமான சந்தா ஆகியவற்றைப் பெறலாம். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும், இப்போது இந்த திட்டத்தில் உங்களுக்கு 20% கேஷ்பேக்கும் வழங்கப்படும்.

ஜியோ ரூ 599 திட்டம்

இது ஜியோவின் மூன்றாவது ப்ரீபெய்ட் திட்டமாகும். இதில் நீங்கள் ரூ .119 கேஷ்பேக் பெற வாய்ப்பு கிடைக்கும். 84 நாட்கள் செல்லுபடியாகும் இந்தத் திட்டத்தில், தினசரி 2 ஜிபி டேட்டா, அனைத்து ஜியோ செயலிகளுக்கான சந்தா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகிய நன்மைகளைப் பெறுவீர்கள்.

சமீபத்தில் ரிலையன்ஸ் (Reliance)ஜியோ பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் பெற முடியும். மேலும் தகவலுக்கு, ஜியோ செயலி அல்லது வலைத்தளத்தைப் பார்வையிடவும். உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து பயன் பெறவும்.

ALSO READ: Jio பயனர்களுக்கு இலவச Disney+ Hotstar: இந்த வழியில் இந்த சேவையை பெறலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News