வியக்க வைக்கும் வசதிகளுடன் வருகிறது Zebronics Jive 2.0!

மின்னணு உலகின் ஜாம்பவான் ஜிப்ரானிக்ஸ்-ன் அசர வைக்கும் வசதிகளுடன் வருகிறது Zebronics Jive 2.0!

Updated: Jun 12, 2018, 02:28 PM IST
வியக்க வைக்கும் வசதிகளுடன் வருகிறது Zebronics Jive 2.0!

மின்னணு உலகின் ஜாம்பவான் ஜிப்ரானிக்ஸ்-ன் அசர வைக்கும் வசதிகளுடன் வருகிறது Zebronics Jive 2.0!

ப்ளூடூத் மூலம் ஒலிப்பெருக்கிகளை இயக்குவது என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சாதாரண விஷயமாக மாறிவிட்டது. பல்வேறு பிரதான மின்னணு நிறுவனங்களும் இந்த சூத்திரத்தினை தற்போது பயன்படுத்தி வருகின்றது. இதன் அடுத்தக்கட்டமாக இரண்டு ஒலிப்பெருக்கிகளை ப்ளூடூத் இணைப்பு மூலம் இயக்குவதற்கான வசதிகளும் வந்துவிட்டது.

ஆனால் இந்த இரண்டு ஒலிப்பெருக்கிகளிலும் வேறு வேறு ஒலிகளை இயக்கும் (ideal audio separation) வசதி எட்டாக் கணியாகவே இருந்தது.

இந்நிலையில் தற்போது மின்னணு உலகின் ஜாம்பவான் ஜிப்ரானிக்ஸ் இதனை சாத்தியப்பபடுத்தியுள்ளது. தனது புதுவரவான Zebronics Jive 2.0-ல் ஒலிகளை பிரித்து வழங்கும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

5 வாட் யூனிட் மின்சார தேவையினை கொண்டு இயங்கும் இந்த ஒலிப்பெருக்கிகள், துல்லியமான இசையினை பிரித்து வழங்குவதில் கைதேர்ந்தவையாக செயல்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஒலிப்பெருக்கிகளில் வெளியாகும் ஒலிகளை ஒன்றாக இணைத்து (Mono) ஒலியாகவும் கேட்கலாம். அதே வேலையில் திரையரங்க பிரிப்பு (Stereo) வசதியுடன் பிரித்தும் கேட்கலாம். இதனால் ஒரே ஒலியினை இரண்டு வேறு அறைகளில் கேட்கும் வசதி சாத்தியமாகிறது.

மற்றொரு சிறப்பம்சமாக இரண்டு ஒலிப்பெருக்கிகளிலும் இரண்டு ஒசைகளையும் நாம் ஒலிக்க செய்யலாம். இதன் 2000mAh பேட்டரி திறன் இந்த ஒலிப்பெருக்கிகளை சுமார் 8 மணி நேரத்திற்கு ஒலிக்க வைக்கும். இதன் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.4499 இந்த ஒலிப்பெருக்கியின் சிறப்பசங்களுக்கு ஈடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.