இந்தியா-ல் இன்று முதல் Ford Freestyle -ன் ​​முன்பதிவு தொடக்கம்!

Ford Freestyle கார் மாடலுக்கான முன்பதிவு ஏப்ரல் 7, 2018 முதல் தொடங்கும் என்று Ford நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated: Apr 7, 2018, 09:57 AM IST
இந்தியா-ல் இன்று முதல் Ford Freestyle -ன் ​​முன்பதிவு தொடக்கம்!

Ford இந்தியா நிறுவனம் விரைவில் Freestyle மாடல் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய Ford Freestyle மாடலுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் லைவ் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் முன்பதிவு ஏப்ரல் 7, 2018 முதல் தொடங்கும் என்று Ford நிறுவனம் அறிவித்துள்ளது.

Ford Freestyle மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 94.6 பிஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் வரை செல்லும். டீசல் இன்ஜின் 98.6 பிஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 24.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும். இரண்டு இன்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

Ford Freestyle மாடலில் 6.5 இன்ச் சின்க் 3 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியை வழங்குகிறது. Ford Freestyle மாடல் ஆம்பியென்ட், டிரெண்ட், டைட்டானியம், டைட்டானியம் பிளஸ் என நான்கு வித ட்ரிம்களில் கிடைக்கிறது. 

Ford Freestyle மாடலில் முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஸ், இபிடி, இன்ஜின் இம்மொபோலைசர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கீலெஸ் என்ட்ரி, அப்ரோச் சென்சார்கள், பெரிமீட்டர் தெஃப்ட் அலாரம், சீட்-பெல்ட் ரிமைன்டர், ஆட்டோமேடிக் ரீலாக் போன்றவை வழங்கப்படுகிறது.

இதன் டாப்-எண்ட் மாடலில் ஆக்டிவ் ரோல்-ஓவர் ப்ரோடெக்ஷன், பக்கவாட்டுகளில் கர்டைன் ஏர்பேக் மற்றும் எமர்ஜென்சி அசிஸ்டண்ஸ் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இந்த Ford Freestyle மாடலில் வழங்கப்படுகிறது.